Homeசெய்திகள்சினிமாவிஜய்க்கு அரசியல் தேவையா?.... அவரு ஸ்கிரிப்ட் எழுதி பேசுற ஆளு.... விவேக் பிரசன்னாவின் பளீச் பதில்!

விஜய்க்கு அரசியல் தேவையா?…. அவரு ஸ்கிரிப்ட் எழுதி பேசுற ஆளு…. விவேக் பிரசன்னாவின் பளீச் பதில்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் துணை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக் பிரசன்னா. அந்த வகையில் இவர் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து பெயர் பெற்றுள்ளார். விஜய்க்கு அரசியல் தேவையா?.... அவரு ஸ்கிரிப்ட் எழுதி பேசக்கூடிய ஆளு.... விவேக் பிரசன்னாவின் பளீச் பதில்!மேயாத மான் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார் விவேக் பிரசன்னா. மேலும் இவர் சூரரைப் போற்று, லால் சலாம், பிளாக் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக ஆதி நடிப்பில் வெளியான சப்தம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் விஜயின் அரசியல் வருகை குறித்து பேசி உள்ளார். அதாவது, சினிமாக்காரனுக்கு அரசியல் எதுக்கு? விஜய்க்கு அரசியல் தேவையா? அவரெல்லாம் ஸ்கிரிப்ட் எழுதி பேசக்கூடிய ஆள். அவரெல்லாம் அரசியல் கட்சி தொடங்கனுமா? என்றெல்லாம் நிறைய கமெண்ட்ஸ் வருகிறது. விஜய்க்கு அரசியல் தேவையா?.... அவரு ஸ்கிரிப்ட் எழுதி பேசக்கூடிய ஆளு.... விவேக் பிரசன்னாவின் பளீச் பதில்!அதைப்பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்று விவேக் பிரசன்னாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விவேக் பிரசன்னா, “அண்ணாதுரை (நாடகத்துறை) , கலைஞர் (நாடகத்துறை, எழுத்து) எம்.ஜி. ராமச்சந்திரன் (நடிகர்), புரட்சித்தலைவி அம்மா (நடிகை). இதற்கு மேல் என்ன விளக்கம் சொல்ல வேண்டும். மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நிறைய கமெண்ட்ஸ் வரும், போகும். மக்கள் ஏற்றுக் கொண்டால் யார் வேண்டுமானாலும் சமூகத்தின் ஒரு அங்கம் தான். அரசியலில் ஒரு அங்கம் தான். நாளைக்கு நான் வார்டு கவுன்சிலர் ஆகிவிட்டால் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டார்கள் என்று அர்த்தம்” என்று பதிலளித்துள்ளார்.

MUST READ