Homeசெய்திகள்சினிமாதங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரமுக்கு காயம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரமுக்கு காயம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

-

‘தங்கலான்’ படப்பிடிப்பில் நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகை பார்வதி மாளவிகா மோகனன்,  பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

பிரிட்டிஷ்காரர்கள் கட்டுப்பாட்டில் இருந்த கோலார் தங்க சுரங்கத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. தற்போது சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியிருக்கின்றன.

இந்நிலையில் படப்பிடிப்பில் ஒத்திகையில் போது நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது எனவும் விக்ரமின் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக கொண்டாடியதற்கு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

MUST READ