Homeசெய்திகள்சினிமாநடிகை அமலா பாலுக்கு இரட்டை குழந்தைகள்?... இணையத்தில் பரவும் தகவல்...

நடிகை அமலா பாலுக்கு இரட்டை குழந்தைகள்?… இணையத்தில் பரவும் தகவல்…

-

நடிகை அமலா பாலுக்கும், அவரது கணவரும் தொழில் அதிபருமான ஜெகத் தேசாய்க்கும் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக தகவல் வைரலாகி வருகிறது.

தமிழில் வெளியான மைனா என்ற படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை அமலா பால். இதனை தொடர்ந்து தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்த படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தன. தொடர்ந்து ராட்சசன், வேலையில்லா பட்டதாரி 2, ஆடை உள்ளிட்ட படங்களில் அமலாபால் நடித்து கவனம் பெற்றார்.

இறுதியாக அமலா பால் பிருத்விராஜ் நடித்த ஆடு ஜீவிதம் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த இத்திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே நடிகை அமலா பால், பிரபல கோலிவுட் இயக்குனர் விஜய்யை 2014 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இந்த ஜோடி 2017-ம் ஆண்டு பிரிந்து சென்றது.

இதன் பின்னரும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். அமலா பால் கடந்த ஆண்டு தொழிலதிபர் ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் முடித்தார். இதன் பின்னர் அவர் கர்ப்பம் அடைந்திருந்த நிலையில் தற்போது அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி உள்ளன. இந்த தகவலை உறுதிப்படுத்தாமல் ஏராளமானோர் அமலா பாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

MUST READ