Homeசெய்திகள்சினிமாஅடுத்தடுத்து வெற்றிப் படங்கள்... சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய மலையாள பிரபலம்...

அடுத்தடுத்து வெற்றிப் படங்கள்… சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய மலையாள பிரபலம்…

-

- Advertisement -
அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்து வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளாராம்.

பிரபல நடிகையாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாளத்தில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த பிரேமம் திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இத்திரைப்படம் மெகா ஹிட் அடித்ததை தொடர்ந்து, இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. கடந்த 9 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். மலையாளத்தில் அடுத்தடுத்து நடித்து வந்த அவர் தனுஷ் நடித்த கொடி திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

பின் மலையாளம், தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளிலும் மாறி மாறி அடுத்தடுத்து நடித்து வந்தார். கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்களை வெகுவாக கவர்ந்தார். இத்திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. அதில் படத்திற்கு இளைஞர்களின் ஆதரவு பெரிதளவில் கிடைத்தது. மேலும், இத்திரைப்படம் சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பெரும் சாதனை படைத்தது.

இத்திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கார்த்திகேயா 2 மற்றும் டில்லி ஸ்கொயர் படங்கள் வெற்றி பெற்றதை அடுத்து, தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வரை ஒரு திரைப்படத்திற்கு ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் அனுபமா பரமேஸ்வரன், அடுத்த படத்திற்கு சுமார் 2 கோடி ரூபாய் உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

MUST READ