நடிகை தீபிகா படுகோன் தான் தாயானதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன். இவர் கடைசியாக ஜவான் மற்றும் கல்கி 2898AD ஆகிய ஆயிரம் கோடி வசூலை தட்டி தூக்கிய படங்களில் நடித்து பெயர் பெற்றுள்ளார். இதற்கிடையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் ரன்வீர் சிங்- ஐ திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார் தீபிகா படுகோன். மேலும் கடந்த பிப்ரவரி மாதம் தான் கர்ப்பமாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோரின் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
கர்ப்பமாக இருக்கும் சமயத்திலும் கூட பல பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பலரின் பாராட்டுகளை பெற்றார். இந்நிலையில் தான் நேற்று (செப்டம்பர் 7) மாலை 5 மணி அளவில் தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எனவே ரசிகர்களும் திரை பிரபலங்களும் தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் தம்பதிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -