நடிகை திவ்யபாரதி கடந்த 2021 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இந்த படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகை திவ்யபாரதி. அதைத்தொடர்ந்து இவர் மதில் மேல் காதல் எனும் படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் கிங்ஸ்டன் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் திவ்யபாரதி. ஜிவி பிரகாஷின் 25ஆவது படமான இந்த படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக திவ்யபாரதி நடிக்கிறார். ஜிவி பிரகாஷ், திவ்யபாரதி ஆகியோரின் கூட்டணி இரண்டாவது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பான் இந்திய அளவில் உருவாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பாக வெளியானது. இதற்கிடையில் இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். அதைதொடர்ந்து படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திவ்ய பாரதி கடந்த ஜனவரி 28ஆம் தேதி (நேற்று) தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு கிங்ஸ்டன் பட குழுவினர் படப்பிடிப்பு தளத்தில்
கேக் ஒன்றுடன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் மற்றும் மற்ற பட குழுவினருடன் திவ்யபாரதி கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.