அடுத்தடுத்து பாலிவுட் பக்கம் கதை கேட்கும் ஜோதிகா
- Advertisement -
சைத்தான் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் ஜோதிகா நடிக்க உள்ளார்.

தமிழில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தில் அறிமுகம ஆனவர் நடிகை ஜோதிகா. முதல் படமே அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. இதையடுத்து விஜய்யுடன் குஷி படத்தில் இணைந்து நடித்தார். இத்திரைப்படத்தையும் எஸ்.ஜே.சூர்யா தான் இயக்கி இருந்தார். குஷி படம் மாபெரும் ஹிட் படமாக மாறியதால் முன்னணி நடிகையாக உருவெடுத்தார் ஜோதிகா. அடுத்தடுத்து ஜோதிகாவுக்கு ஏறுமுகம் தான். இதைத் தொடர்ந்து சூர்யாவுடன் மட்டும் கிட்டத்தட்ட 5 திரைப்படங்களில் ஜோதிகா நடித்துள்ளார்.

இந்த 5 திரைப்படங்களுமே கோலிவுட்டின் மைல்கல்லாக உள்ளன. பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் இடைவெளி எடுத்துக் கொண்ட ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் என பல வெற்றிப் படங்களில் நடித்தார். அண்மையில் மம்மூட்டியுடன் இணைந்து காதல் தி கோர் என்ற மலையாள படத்திலும் நடித்தார்.

இறுதியாக ஜோதிகா நடிப்பில் பாலிவுட்டில் உருவாகி உள்ள திரைப்படம் சைத்தான். அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் ஆகிய இருவரும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. இந்நிலையில், நடிகை ஜோதிகா மீண்டும் ஒரு பாலிவுட் படமான ஸ்ட்ரீட் 2 படத்தில் நடிக்கிறாராம். ராஜ்குமார் ராவ் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.