Homeசெய்திகள்சினிமாதனது மகன் குறித்து சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்த நடிகை கயல் ஆனந்தி!

தனது மகன் குறித்து சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்த நடிகை கயல் ஆனந்தி!

-

- Advertisement -

 

தனது மகன் குறித்து சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்த கயல் ஆனந்தி!
File Photo

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் கயல் ஆனந்தி. கடந்த 2014- ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே ஆண்டில் வெளியான கயல் படத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தைப் பெற்றார்.

மோக்கா புயல் -இன்று உருவாகிறது! 70 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும்

இந்த படத்திற்கு பிறகு கயல் ஆனந்தி என பெயர் மாற்றம் பெற்றார். தனது சிறந்த நடிப்பால், அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். இதைத் தொடர்ந்து, விசாரணை, சண்டிவீரன், திரிஷா இல்லனா நயன்தாரா, பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இதில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் நல்ல விமர்சனத்தைப் பெற்று தந்தது. படத்தில் பிஸியாக நடித்து வந்த கயல் ஆனந்தி உதவி இயக்குநர் சாக்ரடீஸ் என்பவரை நான்கு வருடம் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும், சமீபத்தில் பிறந்தது. இவர் நடித்துள்ள ராவணக் கோட்டம் திரைப்படம் வரும் மே 12- ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதையொட்டி, இந்த படத்தின் புரொமோஷன்ஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், கலந்து கொண்ட கயல் ஆனந்தி தனது மகன் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

தலைவர்கள் இறுதி கட்டப் பிரச்சாரம் – இன்று மாலையுடன் ஓய்கிறது

அதன்படி, எனது மகனுக்கு சாதியில்லா சான்றிதழை வழங்கியுள்ளேன். தான் படித்த புத்தகங்களும், உரையாடிய சில நண்பர்களும் தான் இந்த மாற்றத்திற்கு காரணம் என்று கூறியுள்ளார்.

MUST READ