Homeசெய்திகள்சினிமா35 ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட் பக்கம் திரும்பும் குஷ்பு

35 ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட் பக்கம் திரும்பும் குஷ்பு

-

- Advertisement -
பிரபல நடிகை குஷ்பூ கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலிவுட் பக்கம் திரும்பியிருக்கிறார். அங்கு புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

1980 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வந்தார். தமிழ்க் சினிமாவின் முதன்முதலாக ஒரு நடிகைக்கு கோவில் கட்டப்பட்டது என்றால் அது குஷ்புவுக்கு தான். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து இந்திய மொழிகளிலும் நடித்து பான் இந்தியா அளவில் சூப்பர் ஹிட் ஆனார் குஷ்பூ. ரஜினி, கமல், பிரபு, கார்த்திகக், சரத்குமார், விஜயகாந்த் என பல உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர்.

தெலுங்கிலும் டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இயக்குநர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்பு, அவ்னி சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். தற்போது, குஷ்பு முழு நேர அரசியல்வாதியாக மாறியுள்ளார். இந்நிலையில், நடிகை குஷ்பு மீண்டும் பாலிவுட்டில் புதிய படம் நடிக்க உள்ளார். குஷ்பு சினிமாவில் அறிமுகம் ஆனதே இந்தி படத்தின் மூலம் தான். குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் நடித்திருந்தார். பின்னர் வளர்ந்த பின் நாயகியாகவும் அவர் நடித்தார்.

இந்தியில் அவர் நாயகியாக நடித்த பிறகு தான் தமிழில், தர்மத்தின் தலைவன் என்ற படத்தில் அறிமுகமானார். தற்போது நடிகை குஷ்பு, நானா படேகருடன் இணைந்து நடிக்கிறார். இவர் காலா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ