திருமணத்திற்காக தான் மதம் மாற்றப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு நடிகை குஷ்பு பதில் அளித்துள்ளார்.
நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் நடிகையாக வலம் வந்தவர். அதையடுத்து இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டார். தற்போது படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இப்போது சுந்தர் சியைத் திருமணம் செய்து கொள்வதற்காக மதம் மாறிவிட்டதாக பல கருத்துக்கள் எழுந்து வந்த நிலையில் அதற்காக தற்போது பதில் கொடுத்துள்ளார் குஷ்பூ.
“நான் மதம் மாறவும் இல்லை மதம் மாறுமாறு வலியுறுத்தப்படவும் இல்லை. எங்களது 23 வருட திருமண வாழ்க்கை மிகவும் உறுதியாகவும், நம்பிக்கை அடிப்படையிலும், மரியாதை, சமத்துவம், அன்பு அடிப்படையிலும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இதற்கு மேலும் யாருக்காவது சந்தேகம் இருந்தால் தயவு செய்து எங்கேயாவது மலையேற செல்லுங்கள். உங்களுக்கு அது அவசியம் தேவைப்படுகிறது.” என்றார்.
மேலும் இந்திய அரசின் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் மதத்திற்கு சம்பந்தமில்லாமல் யார் யாரை வேண்டுமானால் திருமணம் கொள்ளலாம் என்று இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.