Homeசெய்திகள்சினிமாகோவிலைப் பெருக்கி சுத்தம் செய்த நடிகை குஷ்பூ....காரணம் என்ன?

கோவிலைப் பெருக்கி சுத்தம் செய்த நடிகை குஷ்பூ….காரணம் என்ன?

-

கோவிலைப் பெருக்கி சுத்தம் செய்த நடிகை குஷ்பூ....காரணம் என்ன?90களில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. ரஜினி, கமல், பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜயகாந்த் என பல உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர். இயக்குனர் சுந்தர் சி யை மணந்து கொண்ட இவர் தற்போது அவ்னி சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்தும் வருகிறார். சினிமாவில் பிஸியாக இருக்கிறபோதும் இவர் தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்நிலையில் குஷ்பூ சென்னையில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில் துடைப்பத்தால் தரையைப் பெருக்கி சுத்தம் செய்யும் புகைப்படங்களை தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது கோவிலுக்கு பணிவிடை செய்யும் பொழுது மனதில் உள்ள பாரம் குறைந்து அமைதி கிடைக்கும் என்றும், ஆதிகேசவ பெருமாள் கோவிலை சுத்தம் செய்த பின்பு தன்னுடைய மனம் சாந்தமாக உள்ளது என்றும் அவர் பதிவிட்டுள்ளார். வரும் ஜனவரி 22 அன்று அயோத்தியில் வரலாற்றுச் சிறப்புமிக்க ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. இதனால் நாடே பக்தி மயம் பரவி இந்த நிகழ்வை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய சமயத்தில் குஷ்புவின் இந்த ஆன்மீக ரீதியிலான பதிவு உணர்வுப்பூர்வமிக்கதாக கருதப்படுகிறது.

MUST READ