Homeசெய்திகள்சினிமாவிரைவில் சுந்தர்.சி-யின் 'கலகலப்பு 3'..... அப்டேட் கொடுத்த குஷ்பு!

விரைவில் சுந்தர்.சி-யின் ‘கலகலப்பு 3’….. அப்டேட் கொடுத்த குஷ்பு!

-

நடிகை குஷ்பு, சுந்தர்.சி இயக்க இருக்கும் கலகலப்பு 3 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.விரைவில் சுந்தர்.சி-யின் 'கலகலப்பு 3'..... அப்டேட் கொடுத்த குஷ்பு!

திரை உலகில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வரும் சுந்தர். சி கடைசியாக அரண்மனை 4 திரைப்படத்தில் இயக்கியிருந்தார். அடுத்தது அரண்மனை 5 திரைப்படத்தையும் இயக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையில் கேங்கர்ஸ் எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார் சுந்தர்.சி. இதற்கிடையில் இவர், கடந்த 2012 ஆம் ஆண்டு கலகலப்பு எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வெளியான கலகலப்பு 2 திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்தது. எனவே அடுத்தபடியாக சுந்தர். சி, கலகலப்பு 3 திரைப்படத்தை இயக்கப் போகிறார். இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில் சுந்தர். சி யின் மனைவியும் நடிகையுமான குஷ்பு தனது சமூக வலைதள பக்கத்தில் கலகலப்பு 3 படம் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “விரைவில் கலகலப்பு 3 திரைப்படம் உருவாகும். படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். கொண்டாட்டத்திற்காக காத்திருங்கள்” என்று குறிப்பிட்டு கலகலப்பு 3 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

கலகலப்பு 3 படத்தில் ஏற்கனவே மிர்ச்சி சிவா, விமல், வாணி போஜன் போன்றோர் நடிக்கப் போவதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

MUST READ