Homeசெய்திகள்சினிமா'கருத்தம்மா' படம் பண்ணும் போது பாரதிராஜாவிடம் இதை தான் சொன்னேன்........ நடிகை மகேஸ்வரி!

‘கருத்தம்மா’ படம் பண்ணும் போது பாரதிராஜாவிடம் இதை தான் சொன்னேன்…….. நடிகை மகேஸ்வரி!

-

- Advertisement -

நடிகை மகேஸ்வரி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்தவர். அந்த வகையில் இவர் தமிழில் கருத்தம்மா படத்தின் மூலம் அறிமுகமானார்.'கருத்தம்மா' படம் பண்ணும் போது பாரதிராஜாவிடம் இதை தான் சொன்னேன்........ நடிகை மகேஸ்வரி! அதைத்தொடர்ந்து உல்லாசம், நாம் இருவர் நமக்கு இருவர், சுயம்வரம் ஆகிய படங்களில் அஜித், விக்ரம், பிரபுதேவா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றினார். அதன் பிறகு கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய மகேஸ்வரி, இயக்குனர் பாரதிராஜாவிடம் என் பெயரை மாற்ற வேண்டாம் என கூறியதாக தெரிவித்துள்ளார். அதன்படி அவர், “பாரதிராஜா சார் எந்த ஒரு கதாநாயகியை அறிமுகப்படுத்தினாலும் அவருடைய பெயரை மாற்றுவார். ஆனால் கருத்தம்மா படம் பண்ணும் போது நான் பாரதிராஜா சாரிடம் மகேஸ்வரி என்ற பெயரை மாற்ற வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தேன்.'கருத்தம்மா' படம் பண்ணும் போது பாரதிராஜாவிடம் இதை தான் சொன்னேன்........ நடிகை மகேஸ்வரி! ஏனென்றால் என்னுடைய தாத்தா – பாட்டி அந்த பெயரை எனக்கு விருப்பப்பட்டு வைத்தார்கள் என்று சொன்னேன். அதற்கு பாரதிராஜா சாரும் ஓகே மகி என்று சொன்னார். அதிலிருந்து அவர் என்னை மகி என்று தான் அழைப்பார்” என்றார்.

தனித்துவமான படங்களை இயக்கி ரசிகர்களால் இயக்குனர் இமயம் என்று கொண்டாடப்படும் பாரதிராஜா தன்னுடைய படங்களில் நடிகைகளை அறிமுகப்படுத்தும்போது செண்டிமெண்ட்டான R வரிசையில் பெயர் வைப்பார். ராதிகா, ராதா, ரஞ்சிதா போன்றநடிகைகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ