நடிகை மமிதா பைஜு, விஜய் குறித்து பேசி உள்ளார்.நடிகை மமிதா பைஜு மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியான பிரேமலு திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார். அதே சமயம் தமிழிலும் ரெபல் படத்தில் நடித்திருக்கிறார். அடுத்தது பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார் மமிதா பைஜு. இதற்கிடையில் இவர் ஹெச். வினோத் இயக்கி வரும் தளபதி 69 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். சத்யன் சூர்யன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
“#Thalapathy69 is a dream come true moment for me which I have wished long🤩. Working with #ThalapathyVijay sir was the greatest achievement🤞. When @actorvijay sir asks me “Hi ma, Epdi Iruka” I will be shivering 😀. He talks very sweet❤️”
– #MamithaBaiju pic.twitter.com/TaKZ7G5Zhz— AmuthaBharathi (@CinemaWithAB) January 17, 2025
இந்நிலையில் நடிகை மமிதா பைஜு, விஜய் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர் பேசியதாவது, “தளபதி 69 படத்தில் என்னை நடிக்க அழைத்தது என் கனவு கனவான தருணமாக இருந்தது. விஜயுடன் இணைந்து நடிப்பது சிறந்த சாதனையாக நினைக்கிறேன். அவர் ஹாய் மா எப்படி இருக்க என்ற சாதாரணமாக கேட்பார். ஆனால் நான் நடுங்குவேன். அவர் மிகவும் ஸ்வீட்டாக பேசுவார்” என்று தெரிவித்துள்ளார்.