நடிகை மஞ்சு வாரியர் இயக்குனர் வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகை மஞ்சு வாரியர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழிலும் சில படங்களில் நடித்து பெயர் பெற்றுள்ளார். அந்த வகையில் இவர் தனுஷுடன் இணைந்து அசுரன், அஜித்துடன் இணைந்து துணிவு, ரஜினியுடன் இணைந்து வேட்டையன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் மிஸ்டர் எக்ஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர் மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் சூரி, சேத்தன், இளவரசு, கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ ஆகியோரும் நடித்திருந்தனர். இந்த படம் நேற்று (டிசம்பர் 20) உலகம் முழுவதும் வெளியானது. இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். ஆர் எஸ் இன்போடெயின்மென்ட் நிறுவனமும் கிராஸ் ரூட் பிலிம் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது.
Thank you #VetriMaaran Sir for Mahalakshmi ❤️ #ViduthalaiPart2 in cinemas now! pic.twitter.com/kWl7uaai6z
— Manju Warrier (@ManjuWarrier4) December 21, 2024
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் தனது சமூக வலைதள பக்கத்தில் விடுதலை 2 படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து இயக்குனர் வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.