கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலிப் குமார் இயக்கியிருந்தார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சுனில், தமன்னா, மோகன்லால், சிவராஜ குமார் உள்ளிட்டோர் கேமியா ரோலில் நடித்திருந்தனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி படமாக அமைந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது மட்டுமல்லாமல் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து வரலாற்றுச் சாதனை படைத்தது. எனவே ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு ஜெயிலர் 2 திரைப்படம் உருவாக இருப்பதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் வசந்த் ரவிக்கு மனைவியாக நடித்திருந்த நடிகை மிரனா, ஜெயிலர் 2 குறித்து சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அதில், “ஜெயிலர் 2 படம் குறித்த அறிவிப்பு பற்றி
நெல்சன் சாரிடம் கேட்டேன். அவர் ஸ்கிரிப்ட் ஒர்க் போய்கிட்டு இருக்குன்னு சொன்னாரு. நான் அதன் பிறகு வேறு எதுவும் கேட்கவில்லை. அந்தப் படத்திற்கு நாம் தேவையா இல்லையா என்பதை ஒரு இயக்குனர் தான் முடிவு செய்ய வேண்டும். வாய்ப்பு வந்தால் அதை எடுத்துக் கொள்வோம்” என்று பேசியுள்ளார்.
நடிகை மிர்னா கொடுத்த இந்த அப்டேட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.