Homeசெய்திகள்சினிமாவிவாகரத்து குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை நமிதா!

விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை நமிதா!

-

நடிகை நமிதா, கடந்த 2004 இல் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர். விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை நமிதா! அதைத் தொடர்ந்து சரத்குமார், பார்த்திபன், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். அதே சமயம் இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் நடிகை நமிதா 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சௌத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் 2022-ல் இரட்டைக் குழந்தைகளையும் பெற்றெடுத்தனர். இந்நிலையில் நடிகை நமீதாவிற்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டதாக சமீபகாலமாக பல செய்திகள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இது குறித்து நடிகை நமிதா, “சமீபகாலமாக திரைத்துறையில் பணியாற்றி வரும் பலரும் விவாகரத்து பெற்று வரும் நிலையில் நடிகை நமிதாவும் தனது கணவரை விவாகரத்து செய்ய உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை நமிதா!இந்நிலையில் இது குறித்து நடிகை நமிதா, “எங்களைப் பற்றிய விவாகரத்து தகவல் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்பாக தான் நான் என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்தேன். ஆனாலும் இது போன்ற விவாகரத்து வதந்தி பரவி வருகிறது. எதன் அடிப்படையில் இது போன்ற வதந்திகளை வெளியிடுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. நடிகையான பின்னர் பல வதங்கிகளை பார்த்து விட்டதால் இந்த விவாகரத்து வதந்தி எனக்கும் என் கணவருக்கும் பெரிதாக தெரியவில்லை. நாங்கள் அதைப் பற்றி கவலைப்படவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ