பில்லா திரைப்படம் தான் என் திரைவாழ்வில் திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் என நடிகை நயன்தாரா தெரிவித்து உள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பில்லா. இது ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீமேக் ஆகும். ரீமேக் திரைப்படமாக இருந்தாலும், இத்திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்து, வெற்றிப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கி இரு்தார். இதில் அஜித் நாயகனாக நடித்த, நயன்தாரா, நமீதா, பிரபு, ரஹ்மான், சந்தானம் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். நீரவ் ஷா படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். இரட்டை வேடங்களில் நடித்திருந்த அஜித்தின் நடிப்பு இப்படத்தில் பெரிதும் பாராட்டப்பட்டது. சுமார் 18 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட பில்லா திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. பில்லா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பில்லா 2 படத்தையும் எடுத்து வெளியிட்டனர். ஆனால், பில்லா 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி அடையாமல், தோல்வியைத் தழுவியது.
இத்திரைப்படத்தில் நடிகை நயன்தாரா, மிக கிளாமராக நடித்திருந்தார். இத்திரைப்படம் நயன்தாராவின் திரைப்பயணத்தையே மாற்றி அமைத்தது. இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பில்லா திரைப்படம் எனது வேறு பரிமாணத்தை காட்டிய படம். அதுவரை கிராமத்து கதையில் நடித்துக் கொண்டிருந்த என்னால், கிளாமரான காட்சிகளிலும் நடிக்க முடியும் என காட்டிய திரைப்படம் தான் பில்லா. கவர்ச்சியாக நடிக்க முடியும் என காட்டத் தான் பில்லா படத்தில் நடித்தேன் என தெரிவித்துள்ளார்.