நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். அந்த வகையில் இவர் தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டுடென்ட்ஸ், டாக்ஸிக் ஆகிய பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் மலையாள சினிமாவின் நடிப்பு ஜாம்பவான்களாக வலம் வரும் மம்மூட்டி, மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் நயன்தாரா.
அதாவது மம்மூட்டி, மோகன்லால் ஆகிய இருவரும் இணைந்து ஏற்கனவே அதிரத்ரம், வர்தா, அனுபந்தம், அடிமகள் உடமகள், 20 ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது 16 வருடங்கள் கழித்து மீண்டும் புதிய படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தை டேக் ஆஃப், மாலிக் ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான மகேஷ் நாராயணன் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதே சமயம் இந்த படத்தில் பகத் பாஸில் இணைந்திருப்பதாக ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என அப்டேட் கிடைத்துள்ளது. இனிவரும் நாட்களில் நடிகை நயன்தாரா இப்படத்தில் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நடிகை நயன்தாரா மம்மூட்டியுடன் இணைந்து பாஸ்கர் தி ராஸ்கல், புதிய நியமம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார் என்பதும் மோகன்லாலுடன் இணைந்து விஸ்மயத்தும்பத்து போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.