Homeசெய்திகள்சினிமாநாகார்ஜுனாவுடன் ஆட்டம் போடும் பூஜா ஹெக்டே.... 'கூலி' பட அப்டேட்!

நாகார்ஜுனாவுடன் ஆட்டம் போடும் பூஜா ஹெக்டே…. ‘கூலி’ பட அப்டேட்!

-

- Advertisement -

கூலி படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.நாகார்ஜுனாவுடன் ஆட்டம் போடும் பூஜா ஹெக்டே.... 'கூலி' பட அப்டேட்!

தமிழ் சினிமாவில் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். ரஜினியின் 171வது படமான இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். நாகார்ஜுனாவுடன் ஆட்டம் போடும் பூஜா ஹெக்டே.... 'கூலி' பட அப்டேட்!மேலும் இதில் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சௌபின் சாகிர், உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர் நாகார்ஜுனா வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அடுத்தது இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே ஐதராபாத், விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் சமீபத்தில் இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஸ்பெஷல் பாடல் ஒன்றுக்கு நடனமாடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.நாகார்ஜுனாவுடன் ஆட்டம் போடும் பூஜா ஹெக்டே.... 'கூலி' பட அப்டேட்! இந்த பாடல் தொடர்பான படப்பிடிப்புகள் கடந்த வாரம் இன்னொரு துறைமுகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 4 நாட்கள் நடைபெற்றதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் இந்த பாடலானது நாகார்ஜுனா மற்றும் பூஜா ஹெக்டே ஆகிய இருவருக்குமான பாடல் என்று சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ