பிரபல தென்னிந்திய நடிகை பூர்ணாவுக்கு குழந்தை பிறந்துள்ளது.
ஷாம்னா காசிம் என்ற மலையாள நடிகை பூர்ணா என்ற பெயருடன் சினிமாவில் வலம் வருகிறார். இவர் பரத் நடிப்பில் வெளியான ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து வேலூர் மாவட்டம் தகராறு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இதுக்கிடையில் பூர்ணா பிரபல துபாய் தொழிலதிபர் ஷானித் ஆசிப் அலி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் ஜேபிஎஸ் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.
இந்நிலையில் கர்ப்பமாக பூர்ணா தற்போது ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். துபாயில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு பிரசவம் நடந்துள்ளது. மருத்துவமனை ஊழியர்களுடன் அவர் காணப்படும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
View this post on Instagram