Homeசெய்திகள்சினிமாதூங்க கேரவன் கூட இல்லை... பருத்திவீரன் படப்பிடிப்பு குறித்து மனம் திறந்த பிரியாமணி..

தூங்க கேரவன் கூட இல்லை… பருத்திவீரன் படப்பிடிப்பு குறித்து மனம் திறந்த பிரியாமணி..

-

- Advertisement -
பருத்திவீரன் படப்பிடிப்பில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து நடிகை பிரியாமணி பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்று கோலிவுட்டில் முன்னணி நடிகராகவும், வாரிசு நடிகராகவும் வலம் வரும் நடிகர் கார்த்தி அறிமுகமான திரைப்படம் பருத்திவீரன். 2007-ம் ஆண்டு திரைக்கு வந்த பெரும் புரட்சியை ஏற்படுத்தியது பருத்தி வீரன். இப்படத்தின் மூலம் தான் கார்த்தி நடிகராக அறிமுகம் ஆகினார். அமீர் இயக்கிய இத்திரைப்படத்தில் கார்த்தி, பிரியாமணி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கே.ஈ.ஞானவேல்ராஜா இத்திரைப்படத்தை தயாரித்து இருந்தார். பருத்தி வீரன் திரைப்படம், தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்று என்றே கூறலாம். முதல் படத்திலேயே தனது அசாத்திய நடிப்பின் மூலம் முத்திரை பதித்தார் நடிகர் கார்த்தி.

யோவ் சித்தப்பா, கூடயே இருக்கையே செவ்வாழை, ஆகிய வசனங்கள் தமிழ் சினிமாவின் கல்ட் வசனங்கள். படம் வெளியாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், கடந்த நவம்பர் மாதம் திடீரென ஒரு புதிய சர்ச்சை வந்தது. ஞானவேல் ராஜா அளித்த பேட்டி ஒன்றில் அமீரை மிகவும் தரக்குறைவாக விமர்சித்து அவமானப்படுத்தும் விதமாக பேசினார். இதனால் இயக்குனர் அமீர் மிகவும் மனமடைந்து உண்மை தெரிந்தவர்களும் அமைதியாக உள்ளீர்களே என்று தன் வேதனையை வெளிப்படுத்தினார். இதையடுத்து, தமிழ் திரையுலகில் பலரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். ஞானவேல் ராஜாவுக்கு எதிராக கண்டங்கள் வலுத்ததும், அவர் மன்னிப்பு கோரினார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அனுபவம் குறித்து பேசிய நடிகை பிரியாமணி, அப்போது உறங்கவும், ஓய்வு எடுக்கவும் கேரவன் கூட இருக்காது. காரில் படுத்து தூங்குவேன் என தெரிவித்தார். மேலும், ஒரு நாள் காட்சி சரியாக வரவில்லை என்றாலும், அடுத்த நாள் அதே நேரம் வரும் வரை காத்திருந்து பதிவு செய்வோம் என்றார். இன்று படத்தை திரையில் பார்க்கும்போது பட்ட கஷ்டங்கள் எல்லாம் மகிழ்ச்சியாக மாறுகிறது என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

MUST READ