அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை லைக்கா நிறுவனத்தின் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க தடையறத் தாக்க, மீகாமன், தடம் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஓம் பிரகாஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும் வில்லனாக அர்ஜுனும் நடித்திருக்கிறார்கள். மேலும் அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ரெஜினா நடித்திருக்கிறார். அடுத்தது ஆரவ், விஜே ரம்யா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஆக்ஷன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதே சமயம் இந்த படமானது பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தில் இருந்து டீசரும் ட்ரைலரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்த படம் வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என ஏற்கனவே படக்குழு அறிவித்துவிட்டது. அதற்கான ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடிகை ரெஜினா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசி உள்ளார். அப்போது பேசிய அஜித், “அஜித் சார் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் Chillஆக இருப்பார். விடாமுயற்சி படத்தில் நடிக்கும் போது என் முடியை பிடிக்கணுமா? பிடிச்சுக்கோங்க என்று சாதாரணமாக சொல்வார். மற்றவர்களெல்லாம் முடிய பிடித்து நடிக்கணுமா? என்று சொல்வார்கள். சார் என்று அவரை கூப்பிட்டால் சார்ன்னு சொல்லாதீங்க என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். அப்படி சொல்லி சொல்லி அவர் சோர்வாகி விடுவார்” என்று பேசியுள்ளார்.
- Advertisement -