Homeசெய்திகள்சினிமாஅவருடைய எல்லா படங்களும் பிடிக்கும்..... இயக்குனர் மகிழ் திருமேனி குறித்து ரெஜினா!

அவருடைய எல்லா படங்களும் பிடிக்கும்….. இயக்குனர் மகிழ் திருமேனி குறித்து ரெஜினா!

-

- Advertisement -
kadalkanni

நடிகை ரெஜினா இயக்குனர் மகிழ் திருமேனி குறித்து பேசி உள்ளார்.அவருடைய எல்லா படங்களும் பிடிக்கும்..... இயக்குனர் மகிழ் திருமேனி குறித்து ரெஜினா!

நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் பணியாற்றி வருபவர். இவர் தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது இவர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர் ஆகியவைகளை பார்க்கும்போது விடாமுயற்சி படத்தில் ரெஜினாவின் கதாபாத்திரம் வலுவான கதாபாத்திரமாக இருக்கும் போல் தெரிகிறது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். ஓம் பிரகாஷ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அனிருத் இதற்கு இசையமைக்கிறார். அவருடைய எல்லா படங்களும் பிடிக்கும்..... இயக்குனர் மகிழ் திருமேனி குறித்து ரெஜினா!மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படம் வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய ரெஜினா, இயக்குனர் மகிழ் திருமேனி குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர் பேசியதாவது, “இயக்குனர் மகிழ் முதலில் வேறொரு கதாபாத்திரத்திற்கான கதையை தான் என்னிடம் சொன்னார். அவருடன் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. அவருடைய எல்லா படங்களும் எனக்கு பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ