Homeசெய்திகள்சினிமாசாண்டா கிளாஸாக சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த நடிகை ரோஜா... மாற்றுத்திறனாளி நெகிழ்ச்சி...

சாண்டா கிளாஸாக சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த நடிகை ரோஜா… மாற்றுத்திறனாளி நெகிழ்ச்சி…

-

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்தநாள் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அமைச்சரும் நடிகையுமான ரோஜா, மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டுக்கு சாண்டா கிளாஸ் வேடத்தில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. வழக்கமாக அவரது பிறந்தநாளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் நல்லது செய்வதை ரோஜா வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஒரு பெண்ணை மருத்துவருக்கு படிக்க வைக்க உதவினார். அவரது சொந்தத் தொகுதியான நகரியில் ஒரு கிராமத்தை தத்தெடுத்தார். அந்த வகையில், விஜயவாடாவை சேர்ந்த மாற்றுத்திறனாளியான நாகராஜ் சாலை ஓரத்தில் செருப்புக் கடை வைத்திருக்கிறார். இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். மனைவி ஒரு சிறுநீரகம் செயல் இழந்து படுத்த படுக்கையாய் உள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஊக்கத் தொகையான 3 ஆயிரம் ரூபாய் தான் இவர்களின் குடும்பத்திற்கு வரும் வருமானம் ஆகும். இந்நிலையில், நாகராஜ் இரண்டு பெண் பிள்ளைகளைப் படிக்க வைக்க கஷ்டப்படுவதாகவும், அவருக்கு உதவுமாறும் நடிகை ரோஜாவுக்கு அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கோரிக்கை வைத்தார். இதைப்பார்த்த ரோஜா, சாண்டா கிளாஸ் போல வேடம் அணிந்து அவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

கிறிஸ்துவரான நாகராஜ் தனது வீட்டுக்கு சாண்டா கிளாஸ் வந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார். அதன் பிறகு தான் அவருக்கு உண்மையான சர்ப்ரைஸ். சாண்டா கிளாஸாக வந்தது அமைச்சர் ரோஜா என்பதை பார்த்த அவர் மகிழ்ச்சியில் கண்கலங்கினார். அக்குடும்பத்துடன் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடிய ரோஜா, குழந்தைகளின் படிப்புக்காக 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார்.

MUST READ