Homeசெய்திகள்சினிமாநாகசைதன்யாவை பிரிந்து ஒரு ஆண்டு கடினப்பட்டேன்.... நடிகை சமந்தா வேதனை...

நாகசைதன்யாவை பிரிந்து ஒரு ஆண்டு கடினப்பட்டேன்…. நடிகை சமந்தா வேதனை…

-

இந்திய திரையுலகில் தனக்கென தனி இடத்தையும், தனி ரசிகர் பட்டாளத்தையும் கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமான அவர், மாஸ்கோவின் காவிரி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகினார். இதைத் தொடர்ந்து சமந்தாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. தமிழில் ஒரு முன்னணி நடிகையாக உயரத் தொடங்கினார். தமிழில் உச்சம் தொட்ட அதே நேரத்தில் தெலுங்கிலும் அவர் கவனம் செலுத்தி வந்தார்.

இவர் கடைசியாக யசோதா திரைப்படத்திலும் குஷி திரைப்படத்திலும் நடித்திருந்தார். விஜய் தேவரகொண்டா சமந்தா கூட்டணியில் வெளியான குஷி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனிடையே, நாகசைதன்யா நடிகை சமந்தாவை திருமணம் செய்து கொண்டார். 4 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி அதையடுத்து தங்கள் திருமண முறிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

அதையடுத்து இருவரும் எங்கு போனாலும் அவர்களின் விவாகரத்து குறித்த கேள்வி அவர்களை துரத்திக் கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் நாகசைதன்யா நடிகை சோபிதா துலிபா உடன் டேட்டிங் செய்து வருவதாகவும் பல செய்திகள் வெளியாகின. இந்நிலையில், பாட்காஸ்ட் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின்னர் பேசிய அவர், நாகசைதன்யாவை பிரிந்த பிறகு ஒருஆண்டு மிகவும் கடினப்பட்டேன் எனவும், அதன் பிறகு சற்று நிம்மதியான சுவாசம் கிடைத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

MUST READ