Homeசெய்திகள்சினிமாகன்னட திரை உலகிலும் பாலியல் தொல்லை - நடிகை சஞ்சனா கல்ராணி பரபர புகார்

கன்னட திரை உலகிலும் பாலியல் தொல்லை – நடிகை சஞ்சனா கல்ராணி பரபர புகார்

-

கன்னட திரை உலகிலும் பாலியல் தொல்லை - நடிகை சஞ்சனா கல்ராணி பரபர புகார்

 

மலையாள, தமிழ் திரைத்துறையைப் போல நடிகைகளுக்கான பாலியல் தொல்லை விவகாரம் கன்னட சினிமா உலகிலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இவ்வாறு நடிகைகள் தெரிவித்துள்ள பாலியல் தொல்லை புகார் குறித்து விசாரிக்க குழு அமைக்கக் கூடாது என கன்னட சினிமா வர்த்தக சபை கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

கேரளாவில் மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது தொடர்பாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் சர்சையை கிளப்பியது.

இதேபோல தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் புயலைக் கிளப்பியது.

கன்னட திரை உலகிலும் பாலியல் தொல்லை - நடிகை சஞ்சனா கல்ராணி பரபர புகார்

இதனைத் தொடர்ந்து கர்நாடகா முதல்வர் சித்தராமையாவை கன்னட இயக்குநர் கவிதா லங்கேஷ் தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்து மனு ஒன்றை கொடுத்துள்ளனர். கூடவே 153 நடிகர் -நடிகைகள் கன்னட சினிமா உலகின் பாலியல் தொல்லை குறித்து விசாரிக்க குழு அமைக்க கோரியும் முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இந்நிலையில்  கர்நாடகா மகளிர் ஆணையத்தின் வேண்டுகோளில் கர்நாடகா சினிமா வர்த்தக சபையின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகா மகளிர் ஆணைய தலைவர் நாகலட்சுமியும் பங்கேற்றிருக்கிறார். கன்னட சினிமாவில் நடிகைகள், பெண் கலைஞர்களுக்கான பாலியல் தொல்லை தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதை அடுத்து கன்னட சினிமா இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் விசாரணை குழு அமைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இயக்குனர் வெற்றிமாறனிடம் வேண்டுகோள் விடுத்த ஜூனியர் என்டிஆர்!

இதனை தொடர்ந்து, கன்னட பட உலகில் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்க வேண்டும் என்று நடிகைகள் சஞ்சனா கல்ராணி, நீது ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து மனு அளித்துள்ள அவர், கன்னட பட உலகில் புதுமுக நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லை. இதுகுறித்து பேச அனுமதி அளிக்கப்படுவதில்லை எனவும் கன்னட திரைத்துறையில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

MUST READ