Homeசெய்திகள்சினிமா'தளபதி 69' படத்தில் நடிகை சிம்ரன்?

‘தளபதி 69’ படத்தில் நடிகை சிம்ரன்?

-

தளபதி 69 படத்தில் நடிகை சிம்ரன் நடிக்க உள்ளதாக அப்டேட் வெளியாகியிருக்கிறது.'தளபதி 69' படத்தில் நடிகை சிம்ரன்?

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான கோட் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி இருந்த நிலையில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சக்கை போடு போட்டு வருகிறது. இதற்கிடையில் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார். எனவே தளபதி 69 திரைப்படம் தான் தனது கடைசி படம் என தெரிவித்துள்ளார். ஆகையினால் தளபதி 69 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி விஜயின் 69 வது திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஆனாலும் சமூக வலைதளங்களில் படம் தொடர்பான பல தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.'தளபதி 69' படத்தில் நடிகை சிம்ரன்?

மேலும் தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு 2024 அக்டோபர் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் பிரேமலு படத்தில் நடித்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த மமிதா பைஜூ முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் படத்தில் மோகன் லால், சமந்தா ஆகியோர் நடிப்பதாக செய்திகள் வெளியானது. 'தளபதி 69' படத்தில் நடிகை சிம்ரன்?இந்நிலையில் இதன் புதிய தகவல் என்னவென்றால், தளபதி 69 படத்தில் நடிப்பதற்காக நடிகை சிம்ரனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே விஜய் மற்றும் சிம்ரன் ஆகிய இருவரும் இணைந்து துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, உதயா எனக்கு பல படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடி மீண்டும் இணைந்தால் ரசிகர்கள் அதை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

MUST READ