Homeசெய்திகள்சினிமாபல வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் இணைந்து நடிக்கும் சிம்ரன்.... எந்த படத்தில் தெரியுமா?

பல வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் இணைந்து நடிக்கும் சிம்ரன்…. எந்த படத்தில் தெரியுமா?

-

- Advertisement -

நடிகை சிம்ரன் பல வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.பல வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் இணைந்து நடிக்கும் சிம்ரன்.... எந்த படத்தில் தெரியுமா?

அஜித் நடிப்பில் சமீபத்தில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதேசமயம் அஜித், மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், பிரபு, சுனில் மற்றும் பலர் நடிக்கின்றனர். பல வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் இணைந்து நடிக்கும் சிம்ரன்.... எந்த படத்தில் தெரியுமா?ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே ஐதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன்படி படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் ஏற்கனவே அறிவித்துவிட்டார். மேலும் மீதமுள்ள சில காட்சிகள் மட்டும் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த படம் 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தது இந்த மாத இறுதியில் இருந்து குட் பேட் அக்லி படத்தின் டீசர் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.பல வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் இணைந்து நடிக்கும் சிம்ரன்.... எந்த படத்தில் தெரியுமா? அதன்படி இந்த படத்தில் நடிகை சிம்ரன் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது சிம்ரன் ஏற்கனவே அஜித்துடன் இணைந்து வாலி, அவள் வருவாளா, உன்னை கொடு என்னை தருவேன் என பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு சிம்ரன் மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

MUST READ