நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகளின் காதலர் இவர்தானா?
80-களில் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என அனைத்து இந்திய மொழி திரையுலகிலும் கலக்கிக் கொண்டிருந்தவர் ஸ்ரீதேவி. இளைஞர்கள் அனைவருக்கும் கனவுக்கன்னியாக வாழ்ந்தவர். இந்திய மொழிகள் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் ஒரு சில படங்களில் ஸ்ரீ தேவி நடித்துள்ளார். 80-ஸ் லேடி சூப்பர்ஸ்டார் என சொல்லும் அளவுக்கு புகழ்பெற்று விளங்கிய ஸ்ரீ தேவி 2018-ம் ஆண்டு துபாயில் கணவருடன் இருந்தபோது, மர்மமான முறையில் இறந்தார். இச்சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜான்வி கபூர் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் உலகில் முன்னணி நடிகையாகவும் வளர்ந்துள்ளார். இதையடுத்து, இளைய மகள் குஷி கபூர் அண்மையில் வெளியான தி ஆர்ச்சிஸ் படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமாகி இருக்கிறார். நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான அத்திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவருக்கு இந்தியில் மட்டுமன்றி தமிழிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
ஆர்ச்சிஸ் படத்தில் குஷி கபூருடன் இணைந்து வேதங் ரெய்னா என்பவர் நடித்திருப்பார். அடிக்கடி இருவரும் சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், விரைவில் இந்த ஜோடி காதலை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது குறித்து பேசிய அவர், தாங்கள் நல்ல நண்பர்கள் என்றும், தங்களுக்குள் பல ஒற்றுமை உள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.