Homeசெய்திகள்சினிமாநடிகை சுனைனா வெளியிட்ட காதலர் புகைப்படம்... இணையத்தில் வைரல்...

நடிகை சுனைனா வெளியிட்ட காதலர் புகைப்படம்… இணையத்தில் வைரல்…

-

- Advertisement -
காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சுனைனா. அதைத் தொடர்ந்து மாசிலாமணி, கவலை வேண்டாம், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்து இருக்கிறார். இது தவிர ட்ரிப் என்ற திரைப்படத்தில் முதன்மை கதாநாயகியாகவும் நடித்திருந்தார்.

அவரது நடிப்பில் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ரெஜினா. இந்தப் படத்தை டோமின் டி சில்வா இயக்கினார். எல்லோ பியர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் இப்படம் தயாரிக்கப்பட்டது. சதீஷ் நாயர் இதற்கு இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தில் சுனைனா உடன் இணைந்து விவேக் பிரசன்னா, நிவாஸ் ஆதித்தன் மற்றும் பலர் நடித்திருந்தனர். கதாநாயகியை முன்னணியாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் கடந்த ஜூன் மாதம் வெளியானது. இதைத் தொடர்ந்து இறுதியாக இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற இணைய தொடரில் சுனைனா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகை சுனைனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் லாக்டு என குறிப்பிட்டு, இருவரின் கைகள் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இதன் மூலன் சுனைனா காதலிப்பது உறுதியாகி இருப்பதாகவும், விரைவில் அவர் யார் என்று அறிவிப்பார் எனவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

MUST READ