சுனைனா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் அப்டேட். வெளியாகியுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு ‘காதலில் விழுந்தேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. அதையடுத்து வம்சம், திருத்தணி, லத்தி, ட்ரிப் , எஸ்டேட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
தற்போது இவர் மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் ‘ரெஜினா‘ என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் சுனைனாவுடன் விவேக் பிரசன்னா, நிவாஸ் ஆதித்தன், பவா செல்லதுரை உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
எல்லோ பியர் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், சதீஷ் நாயர் இசையிலும் உருவாகியுள்ளது. பெண் மையக் கதாபாத்திரம் கொண்ட படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியானது. அதன் பின் 4 மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் ‘சூறாவளி போல’ என்னும் பாடல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வருகின்ற மே 30-ம் தேதி வெளியாகும் என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.