அனிமல் படத்தில் நான் நடித்திருக்கவே மாட்டேன் – விளாசிய டாப்ஸி
தெலுங்கு திரையுலகில் அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் தடம் பதித்த இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, பாலிவுட் பக்கம் திரும்பியிருக்கிறார். அர்ஜூன் ரெட்டியை இந்தியில் ரீமேக் செய்த அவர் அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் அனிமல். பிரபல பாலிவுட் நட்சத்திரம் ரன்பீர் கபூர் இப்படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்தார். மேலும், அனில் கபூர், பாபி தியோல், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அனிமல் திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனம் பெற்றது. இருப்பினும் இத்திரைப்படம் 800 கோடி ரூபாய் வசூலை தாண்டியது. இருப்பினும், அனிமல் படத்திற்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில், திரைப்பட விழாவில் பேசிய புகழ்பெற்ற கதாசிரியர் ஜாவெத், ஒரு திரைப்படத்தில் பெண்ணை அறைவது தவறில்லை என கூறி படம் வெற்றிபெற்றதால் அது மிகவும் ஆபத்தானது என தெரிவித்திருந்தார். காங்கிரஸ் பெண் எம்.பியும் அனிமல் படம் உலகிற்கு ஆபத்தானது என கடுமையாக சாடினர்
இந்நிலையில் அனிமல் படம் தொடர்பாக பேசிய நடிகை டாப்ஸி, நானாக இருந்தால் அனிமல் படத்தில் நிச்சயமாக நடித்திருக்க மாட்டேன். திரைத்துறையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு சில பொறுப்புகள் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.