நடிகை திரிஷா , பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தனது ஸ்டார் அந்தஸ்தை திரும்ப பெற்று தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதன்படி மலையாளத்தில் ஐடென்டிட்டி படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகிறார். இவ்வாறு தமிழ், மலையாளம் என பிசியாக நடித்து வரும் திரிஷா தெலுங்கிலும் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் விஸ்வம்பரா படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை யூ வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க வசிஷ்டா படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார். தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், திரிஷா இதில் இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு வெளியான நாயகி திரைப்படத்தில் திரிஷா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இரண்டாவது முறையாக விஸ்வம்பரா படத்தில் இரட்டை வேடங்களில் திரிஷா நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.