நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய திரை உலகில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், சூர்யா, அஜித், தனுஷ், சிம்பு, கார்த்தி, ரவி, விக்ரம், விஜய் சேதுபதி உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இன்றுவரையிலும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். மேலும் இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து கலக்கி வருகிறார். அதாவது இளம் நடிகைகள் எத்தனை பேர் ட்ரெண்டாகி வந்தாலும் தனக்கான நட்சத்திர அந்தஸ்தை ஸ்ட்ராங்காக தக்க வைத்துக் கொண்டுள்ளார் திரிஷா. அந்த வகையில் 40 வயதை கடந்தும் இளமையாக ஜொலிக்கிறார். இந்நிலையில் திரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பகிரந்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனம் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகை திரிஷாவின் நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. அடுத்தது குட் பேட் அக்லி , தக் லைஃப் போன்ற படங்கள் திரைக்கு வர தயாராகி வருகின்றன. இதற்கிடையில் இவர் சூர்யா 45, ராம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.