நடிகை திரிஷாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை திரிஷா தென்னிந்திய திரை உலகில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர். அந்த வகையில் இவர் அமீர் இயக்கத்தில் வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிசியாக நடித்த வருகிறார். மேலும் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் திரிஷா. இதைத்தொடர்ந்து குட் பேட் அக்லி, சூர்யா 45, தக் லைஃப் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் நடிகை திரிஷாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருப்பதாக திரிஷாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது கிட்டத்தட்ட 6 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலவர்களை கொண்டிருக்கும் நடிகை திரிஷாவின் எக்ஸ் தள கணக்கில் கிரிப்டோ கரன்சி குறித்த ஒரு பதிவு வெளியிடப்பட்டது. பின்னர் அது உடனடியாக டெலிட் செய்யப்பட்டது. இந்நிலையில் தான் நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என்னுடைய ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. அதை சரி செய்யும் வரை பதிவிடப்படும் பதிவுகள் எதுவும் என்னுடைய பதிவு இல்லை” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த தகவல் அதிர்ச்சியை பலருக்கும் ஏற்படுத்தி உள்ளது.