Homeசெய்திகள்சினிமா'உண்மையில் சொக்கத்தங்கம் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் தான்'.... கதறி அழும் நடிகை குஷ்பூ!

‘உண்மையில் சொக்கத்தங்கம் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் தான்’…. கதறி அழும் நடிகை குஷ்பூ!

-

'உண்மையில் சொக்கத்தங்கம் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் தான்'.... கதறி அழும் நடிகை குஷ்பூ!விஜயகாந்த், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விஜயகாந்தின் மறைவிற்கு பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் என பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தற்போது விஜயகாந்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பல நடிகர்களும், இசையமைப்பாளர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் விஜயகாந்தின் உடலுக்கு இறுதி அஞ்சலியை செலுத்த திரண்டு வந்து கொண்டே இருக்கின்றனர். பொதுமக்களும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த படையெடுத்து வருகின்றனர்.'உண்மையில் சொக்கத்தங்கம் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் தான்'.... கதறி அழும் நடிகை குஷ்பூ!

அந்த வகையில் தற்போது நடிகை குஷ்பூ கதறி அழுதபடி விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதை தொடர்ந்து பேசிய குஷ்பு, “யாரைக் கேட்டாலும் விஜயகாந்த்தை சொக்கத்தங்கம் என்று தான் கூறுகிறார்கள். அவருடன் படங்களில் நடிக்கும் போது நாங்கள் பாதுகாப்பாக உணர்வோம் ஏனெனில் எங்களை பாதுகாக்க கேப்டன் இருக்கிறார் என்று. சினிமாவில் மட்டுமல்ல மக்கள் யாருக்கு பிரச்சனை என்றாலும் இறங்கி வேலை செய்பவர்தான் விஜயகாந்த். அவருடன் பல படங்களை படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் வீட்டிலும் சிறிது நாட்கள் இருந்திருக்கிறேன். அவரைப் போன்ற மனிதரை பார்த்ததில்லை. உண்மையில் சொக்கத்தங்கம் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் தான்” என்று பேசியுள்ளார்.

MUST READ