என் அனுமதி இல்லாமலேயே படத்தின் தொடக்கத்தில் ஒரு நிமிட காட்சியை சேர்த்துள்ளனர் – வீடியோ வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் விஜய் மில்டன் !
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மழை பிடிக்காத மனிதன். இதில் விஜய் ஆண்டனி உடன் சத்யராஜ், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
விஜயின் அரசியல் வருகை குறித்து நடிகர் விமலின் பதில் இதுவா? ….. கொந்தளிக்கும் ரசிகர்கள்!
இன்று திரைக்கு வந்துள்ள இப்படத்தில் இயக்குனர் விஜய் மில்டனின் அனுமதி இல்லாமலேயே தொடக்கத்தில் ஒரு நிமிட காட்சி சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் வீடியோ மூலமாக குற்றம் சாட்டியுள்ளார். பத்திரிக்கையாளர்களோடு படம் பார்க்கையில் அந்த ஒரு நிமிட காட்சியை பார்த்ததும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானதாகவும் யார் இதை படத்தில் சேர்த்தார்கள் என தெரியவில்லை என கூறினார். ஒரு படத்தின் சென்சார் முடிந்தும் எப்படி அந்த ஒரு நிமிட காட்சி சேர்க்கப்பட்டது என தெரியவில்லை என கவலை தெரிவித்துள்ளார்.