Homeசெய்திகள்சினிமாஅதர்வா நடிப்பில் உருவாகும் 'டிஎன்ஏ'.... முக்கிய அறிவிப்பு!

அதர்வா நடிப்பில் உருவாகும் ‘டிஎன்ஏ’…. முக்கிய அறிவிப்பு!

-

அதர்வா நடிக்கும் டிஎன்ஏ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.அதர்வா நடிப்பில் உருவாகும் 'டிஎன்ஏ'.... முக்கிய அறிவிப்பு!

நடிகர் அதர்வா, பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது ஒத்தைக்கு ஒத்த போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் இவர் எம் ராஜேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கும் கமிட்டாகி இருக்கிறார். இதற்கிடையில் அதர்வா டிஎன்ஏ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இதில் அதர்வாவுக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடிக்கிறார். இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்குகிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதர்வா நடிப்பில் உருவாகும் 'டிஎன்ஏ'.... முக்கிய அறிவிப்பு!அதே சமயம் இது இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து சமீபத்தில் டப்பிங் பணிகளும் தொடங்கப்பட்டது. அந்த வகையில் இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் டிஎன்ஏ படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று (ஜூலை 5) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என்று பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ