Homeசெய்திகள்சினிமாஅந்தப் படத்தில் இருந்து தான் அஜித்தின் தீவிர ரசிகனாக மாறினேன்.... ஆதிக் ரவிச்சந்திரன்!

அந்தப் படத்தில் இருந்து தான் அஜித்தின் தீவிர ரசிகனாக மாறினேன்…. ஆதிக் ரவிச்சந்திரன்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆதிக் ரவிச்சந்திரன் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அந்தப் படத்தில் இருந்து தான் அஜித்தின் தீவிர ரசிகனாக மாறினேன்.... ஆதிக் ரவிச்சந்திரன்!அதை தொடர்ந்து இவர் சில படங்களை இயக்கியிருந்தாலும் மார்க் ஆண்டனி திரைப்படம் தான் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. இதன் பின்னர் அஜித்தை இயக்கம் வாய்ப்பு கிடைக்க, அதன்படி குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் ஆதிக். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். அந்தப் படத்தில் இருந்து தான் அஜித்தின் தீவிர ரசிகனாக மாறினேன்.... ஆதிக் ரவிச்சந்திரன்!இப்படமானது கேங்ஸ்டர் கலந்த கதைக்களத்தில் அப்பா மகன் உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள இப்படம் 2025 ஏப்ரல் 10 திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் அஜித், தீனா, பில்லா, வாலி, வேதாளம் ஆகிய படங்களின் தோற்றத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் ஸ்பெஷல் கேமியோவும் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றன.அந்தப் படத்தில் இருந்து தான் அஜித்தின் தீவிர ரசிகனாக மாறினேன்.... ஆதிக் ரவிச்சந்திரன்! இந்நிலையில் சமீபத்தில் நடந்த கல்லூரி விழாவில் கலந்து கொண்ட ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் குறித்து பேசியுள்ளார். அதன்படி அவர், “நான் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன். அவருடைய தீனா படத்தில் இருந்து தான் மிகப்பெரிய ரசிகனாக மாறினேன். முதலில் அவர் ஒரு நல்ல மனிதர். அதன் பிறகு தான் அவர் ஒரு நடிகர். இந்தியாவிற்கே பெருமை சேர்த்து கொடுத்திருக்கிறார். பத்மபூஷன் அஜித் சாருக்கு நான் எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் அது பத்தாது. அவரால்தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன். ஐ லவ் அஜித் சார்” என்று பேசியுள்ளார்.

MUST READ