ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தற்போது குட் பேட் அக்லி திரைப்படம் உருவாகி இருக்கிறது. அஜித்தின் 63வது படமாக உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற ஏப்ரல் 10 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். அபிநந்தன் ராமானுஜம் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். அஜித் தவிர திரிஷா, பிரசன்னா, சுனில் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் சம்பந்தமான கதைக்களத்தில் அப்பா- மகன் உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. ஏனென்றால் இந்த படத்தின் டீசரில் அஜித்தின் வின்டேஜ் தோற்றங்களை காட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார் ஆதிக். அதைத்தொடர்ந்து வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இருப்பினும் இரண்டாவது பாடலை விட முதல் பாடலான OG சம்பவம் பாடலை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அந்த அளவிற்கு அந்த பாடல் இணையத்தை கலக்கி வருகிறது. இந்த பாடலை ஜி.வி. பிரகாஷ் பாடியிருந்தார். இந்த பாடலில் ஆதிக் ரவிச்சந்திரன், AK என்று பயங்கரமாக கத்துவார். அதுகூட செம ட்ரண்டாகி வருகிறது. அவர் கத்துவதை பார்க்கும் போது அவர் அஜித்தின் எவ்வளவு பெரிய ரசிகனாக இருப்பார் என்பதை உணர முடிகிறது. அதேசமயம் ஆதித் இந்த பாடலில் கத்துவதை பார்த்த ரசிகர்கள் பாவம் ஆதிக் என்று சொல்லி வந்தார்கள். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஆதிக் ரவிச்சந்திரன், குட் பேட் அக்லி படம் குறித்து பேசி உள்ளார்.
“#GoodBadUgly trailer update is coming next⌛. I’m not a singer, they just asked a person to shout in First single, so I went😁. #AjithKumar sir is currently busy with racing. I will be more than happy, if I’m the Director of AK’s next film also♥️”
– Adhikpic.twitter.com/iPXznp6hLh— AmuthaBharathi (@CinemaWithAB) April 1, 2025
அதில் அவர் பேசியதாவது, “முதல் இரண்டு பாடல்கள் வெளியாகிவிட்டது. அடுத்தது ட்ரெய்லர் வந்து கொண்டே இருக்கிறது” என்று கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து எதனால் பாடகராக மாறிவிட்டீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஆதிக் ரவிச்சந்திரன், “கத்துவதற்கு தான் ஆள் கேட்டார்கள் அதனால் தான் போய் கத்தி விட்டு வந்தேன்” என்று கலகலப்பாக பதில் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து பேசிய அவர், அஜித் சார் இப்போது கார் பந்தயத்தில் பிஸியாக இருக்கிறார். நான் அஜித் சாரின் அடுத்த படத்திற்கும் இயக்குனரானால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்” என்று தெரிவித்துள்ளார்.