தமிழ் சினிமாவில் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அதைத்தொடர்ந்து இவர் சில படங்களை இயக்கியிருந்தாலும் மார்க் ஆண்டனி திரைப்படம் தான் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. தற்போது இவர் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். இதில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில், பிரபு, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன்படி இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.
#AdhikRavichandran about #GVPrakash work in #GoodBadUgly 🤩💥 RR work started 📈#GoodBadUglyFirstSingle | @gvprakash | @Adhikravi pic.twitter.com/sJeJHRMMxW
— Say My Name (@SayMyName2005) March 13, 2025
அதாவது நடிகர் அஜித்தின் வின்டேஜ் படங்களின் குறியீடுகளை காட்டி ரசிகர்களுக்கு தீனி போட்டு இருந்தார் ஆதிக். அதிலும் ஜி.வி. பிரகாஷின் இசையும் சரவெடியாய் வெடித்தது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆதிக், “ஜி.வி. பிரகாஷ் டீசரின் பிஜிஎம் மட்டுமே சூப்பராக பண்ணி இருந்தார். அடுத்தது முழு படத்திற்கான பின்னணி இசை வேலைகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.