Homeசெய்திகள்சினிமாநடிகர் பிரபுவிற்கு மருமகனாகும் ஆதிக் ரவிச்சந்திரன்!

நடிகர் பிரபுவிற்கு மருமகனாகும் ஆதிக் ரவிச்சந்திரன்!

-

- Advertisement -

ஆதிக் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் ஆவார். நடிகர் பிரபுவிற்கு மருமகனாகும் ஆதிக் ரவிச்சந்திரன்!இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர். இந்தப் படம் இவருக்கு வெற்றியை பெற்று தந்தாலும், அடுத்ததாக இவர் இயக்கிய அன்பானவன் அடங்காதவன் அசராதவன் மற்றும் பஹீரா போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.

ஆனால் இறுதியாக இவர் மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஷால் , எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், அபிநயா, ரித்து வர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

மேலும் கடந்த சில தினங்களாக ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித்தின் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நடிகர் பிரபுவிற்கு மருமகனாகும் ஆதிக் ரவிச்சந்திரன்! இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜியின் பேத்தியும், நடிகர் பிரபுவின் மகளுமான ஐஸ்வர்யாவை, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மணமுடிக்க இருக்கிறார். இவர்களின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. எனவே இவர்களின் திருமணம் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி சென்னையில் இருக்கும் தனியார் ஹோட்டலில் கோலாகாலமாக நடைபெற இருக்கிறது.

ஐஸ்வர்யா பிரபு ஏற்கனவே குணால் என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் என்பதும் ஆதிக் ரவிச்சந்திரனை விட ஏழு வயது மூத்தவர் என்பதும்
குறிப்பிடத்தக்கது.

MUST READ