Homeசெய்திகள்சினிமாஉங்களின் கடின உழைப்பு அசாதாரணமானது..... அஜித் குறித்து ஆதிக் வெளியிட்ட பதிவு!

உங்களின் கடின உழைப்பு அசாதாரணமானது….. அஜித் குறித்து ஆதிக் வெளியிட்ட பதிவு!

-

- Advertisement -

அஜித் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.உங்களின் கடின உழைப்பு அசாதாரணமானது..... அஜித் குறித்து ஆதிக் வெளியிட்ட பதிவு!

அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் விடாமுயற்சி திரைப்படம் வெளியான நிலையில் வருகின்ற ஏப்ரல் மாதம் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஆதிக் ரவிச்சந்திரன் படத்தை இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து சமீபத்தில் டீசர் வெளியாகி இணையத்தை கலக்கியது. எனவே இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம், நடிகர் அஜித் கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி கடந்த ஜனவரி மாதம் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் தனது குழுவினருடன் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தை தட்டி தூக்கினார் அஜித். அதை தொடர்ந்து ஸ்பெயினில் கார் பந்தயம் தொடர்பான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், கார் ரேஸிங் வீடியோக்களை பகிர்ந்து, “உங்களின் கடின உழைப்பிற்கும் விடாமுயற்சிக்கும் பலன் கிடைக்கும். இது மிகவும் கடினமான விளையாட்டு. உங்களின் கடின உழைப்பு அசாதாரணமானது. நீங்கள் பெறவேண்டிய அனைத்தையும் பெற வாழ்த்துகிறேன். இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். லவ் யூ சார்” என்று பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ