இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், குட் பேட் அக்லி 2 படம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜிவ பிரகாஷ் நடிப்பில் வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதைத்தொடர்ந்து சிம்புவை வைத்து அன்பானவன், அசராதவன், அடங்காதவன் திரைப்படத்தையும், பிரபுதேவாவை வைத்து பஹீரா திரைப்படத்தையும் இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதைத்தொடர்ந்து இவர் இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் தான் மாபெரும் வெற்றி பெற்று ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பெயரையும் புகழையும் பெற்று தந்தது. ஆதலால் இவர் தற்போது அஜித்தின் நடிப்பில் இயக்கியிருக்கும் குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் இப்படம் வருகின்ற ஏப்ரல் 10 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகின்றன. எனவே இந்த திரைப்படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் தரமான சம்பவம் செய்திருப்பார் என நம்புகின்ற ரசிகர்கள், அஜித், ஆதிக் கூட்டணி மீண்டும் இணையும் எனவும் எதிர்பார்க்கின்றனர். இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படமானது குட் பேட் அக்லி படத்தின் இரண்டாம் பாகமாகவும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய ஆதிக், “முதல் விஷயம் குட் பேட் அக்லி பட வாய்ப்பு எனக்கு கிடைக்கும்போது நான் ஹிட் பட இயக்குனர் இல்லை. முதல் படம் வெற்றி படமாக அமைந்திருந்தாலும் இரண்டாவது படம் படு தோல்வி. அதன் பிறகு எனக்கு எந்த பெரிய ஹீரோவையும் சந்திக்கும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. எப்படி இருக்கும்போது எனக்கு எப்படி ஒருத்தர் டேட் கொடுப்பாரு.
– Is Ajith sir going to do a film with you again after #GBU?
– Will #GoodBadUgly2 be available?
– My first film was a big success, my second film #AAA was a huge failure, I got the opportunity to direct Ajith sir’s film through NKP.
pic.twitter.com/f61kIUI3Fg— Movie Tamil (@MovieTamil4) April 8, 2025
ஆனால் அஜித் சார் நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் இருக்கும் போதே ரெண்டு பேரும் படம் பண்ணலாமா என்று கேட்டார். அவர் எதை வைத்து என்னை தீர்மானித்தார் என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. அஜித் சார் எப்போதும் ஓடுகின்ற குதிரையையோ, ஓடிக்கொண்டிருக்கும் குதிரையையோ தொடுவதே கிடையாது. ஓட முடியாத குதிரையைத் தொட்டு ரெடி பண்ணி அதை ஓட வைப்பது தான் அஜித் சார்” என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.