Homeசெய்திகள்சினிமாஹன்சிகாவாக மாறிய யோகிபாபு..... வெளியானது கலகலப்பான 'பாட்னர்' பட டிரைலர்!

ஹன்சிகாவாக மாறிய யோகிபாபு….. வெளியானது கலகலப்பான ‘பாட்னர்’ பட டிரைலர்!

-

- Advertisement -

நடிகர் ஆதி, ஹன்சிகா,யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘பாட்னர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

பாட்னர் திரைப்படத்தில் ஆதி, ஹன்சிகா, யோகி பாபு, பாண்டியராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பாலக் லால்வானி, ரோபோ சங்கர், ஜான் விஜய், முனீஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மனோஜ் தாமோதரன் எழுதி இயக்கியுள்ளார். சந்தோஷ் தயாநிதி இதற்கு இசை அமைத்துள்ளார்.
இந்த படம் ஒரு காமெடி கலந்த சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
அதேசமயம் பாட்னர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.
இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது.
இந்த ட்ரெய்லரில் யோகி பாபு மற்றும் ஆதி நண்பர்களாக இருக்கிறார்கள். பாண்டியராஜன் ஒரு சயின்டிஸ்ட்டாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் பாண்டியராஜன் ஏதோ ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டிருந்த போது அவரிடம் ஒரு ஃபார்முலாவை ஆதியும் யோகிபாபுவும் திருட செல்கிறார்கள். அப்போது ஏற்பட்ட தகராறில் தவறுதலாக யோகி பாபுவின் மீது அந்த ஃபார்முலா செலுத்தப்படுகிறது. அதன் பின் யோகி பாபு, ஹன்சிகாவாக மாறிவிடுகிறார்.
இதற்குப் பின் இவர்களின் வாழ்க்கையில் நடப்பதை ஒரு கலகலப்பான காமெடி கதையில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

MUST READ