தங்கர் பச்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.
தமிழ் சினிமாவில் அழகி, பள்ளிக்கூடம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் கிளாசிக் படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் தங்கர் பச்சன். தற்போது அவர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ‘கருமேகங்கள் கலைகின்றன’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் பாரதிராஜா ஓய்வுபெற்ற நீதிபதியாக நடித்துள்ளார். அவரது மகனாக கௌதம் மேனனும், மகளாக அதிதி மேனனும் நடித்துள்ளனர். தங்கர் பச்சனும் இந்தப் படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின் எக்ஸ்குளூசிவ் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகின்றன.
அதில் அதிதி பாலன் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் போலீசாக நடித்துள்ளார். புகைப்படங்களில் அதிதி பாலன் நெருப்பாகக் காணப்படுகிறார். ‘அருவி’ படத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை இந்தப் படத்தில் மீண்டும் ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.