Homeசெய்திகள்சினிமாலண்டன் விமான நிலையத்தில் சிக்கித் தவித்த நடிகை அதிதி ராவ்

லண்டன் விமான நிலையத்தில் சிக்கித் தவித்த நடிகை அதிதி ராவ்

-

 நடிகை அதிதி ராவ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். தமிழில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து மலையாளத்திலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்தடுத்து, தமிழில் செக்கச் சிவந்த வானம், சைக்கோ படங்களில் அவர் நாயகியாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் அவர் நடித்து வருகிறார்.
இறுதியாக அதிதி நடிப்பில் பாலிவுட்டில் ஹீராமண்டி தொடர் வெளியானது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய இந்த தொடரில் அதிதி, பிபுஜான் என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் அதிதி ராவின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது. இதனிடையே மகாசமுத்திரம் திரைப்படத்தில் சித்தார்த்துடன் இணைந்து நடித்த அதிதி, அவரை காதலித்தார். இருவரும் காதலித்து வருவதாக அண்மைக் காலமாக செய்திகள் வௌியாகின.
தொடர்ந்து இருவரும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும் அறிவித்தனர். விரைவில் இருவரின் திருமண தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், அதிதி ராவ், நேற்று இந்தியாவிலிருந்து லண்டன் சென்றிருக்கிறார். லண்டன் விமான நிலையத்தில், அவரது லக்கேஜ் எதுவும் வந்து சேரவில்லை. இது தொடர்பாக அதிதி அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, நீங்களே ஏர்லைனில் பேசிக்கொள்ளுங்கள் என்று அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இதனால், தனது பெட்டிகளுக்காக சுமார் 32 மணி நேரம் அவர் காத்திருந்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

MUST READ