அடியே படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.
ஜிவி பிரகாஷ் நடிப்பில் அடியே திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஜிவி பிரகாசுக்கு ஜோடியாக கௌரி கிஷன் நடித்துள்ளார். மேலும் வெங்கட் பிரபு, மிர்ச்சி விஜய் , மதும் கேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மாலி அண்ட் மாண்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. விக்னேஷ் கார்த்திக் இதனை எழுதி இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இதற்கு இசை அமைக்க கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்திருந்தார். பாரலல் யூனிவர்ஸ் கான்செப்டில் உருவாகியிருந்த இந்த படம் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படம் வருகின்ற செப்டம்பர் 29ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.