Homeசெய்திகள்சினிமாநட்சத்திர கலை விழாவிற்கு ஆலோசனை

நட்சத்திர கலை விழாவிற்கு ஆலோசனை

-

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில்  நடத்த திட்டமிடப்பட்டுள்ள நட்சத்திர கலை விழாவிற்காக நடிகர் ரஜினிகாந்திடம் நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை!

நட்சத்திர கலை விழாவிற்கு ஆலோசனைதமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளர் திரு.கார்த்தி, துணைத் தலைவர்கள் திரு.பூச்சி எஸ்.முருகன், திரு.கருணாஸ் ஆகியோர் இன்று (01.07.2024) போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர்.

நட்சத்திர கலை விழாவிற்கு ஆலோசனை தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களான திரு.ரஜினிகாந்த் அவர்களிடமும் மற்றும் திரு.கமல்ஹாசன் அவர்களிடமும் ஆலோசனை பெறுவது வழக்கம். அந்த வகையில் அடுத்து நடத்தபட திட்டமிடப்பட்டுள்ள நட்சத்திர கலை விழா குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்கள்.

வேகமாக நடைபெற்று வரும் நடிகர் சங்க கட்டிடப் பணிகள் குறித்து ஆர்வமாக கேட்டறிந்த திரு.ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் நேரில் வந்து கட்டிடப் பணிகளைப் பார்வையிட உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ